இராமாயண காலத்திலேயே கத்திசண்டை

நண்பரின் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டு இருந்தார்கள்.
இராமாயண காலத்திலேயே கத்திசண்டை நடந்துள்ளதாமே, அப்போதே கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது.. குதிரைப்படை இருந்தது என ஒருவர் அவிழ்த்துவிட்டார்.

நான் பேசலாமா என்றேன்.
ம்ம்ம் என்றார்கள்.

கிமு 2500-4000 கிட்டத்தட்ட 4500 வருடங்களுக்கு முன்பு நாமெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் இருந்த பகுதியில்தானே இருந்தோம் என்றேன்.
ஆமாங்க என்றார்.

4500 வருடங்களுக்கு முன்பு அங்கே இரும்பும் இல்லை குதிரையும் இல்லை அப்புறம் எப்படிங்க ராமர் 72,000 வருடங்களுக்கு முன்பு பிறந்தார் குதிரைப்படையில், கத்திசண்டை போட்டார் என்றேன்.
அது புராணம்க என்றார்.

புராணம் என்றால் பழசுன்னு அர்த்தம்,
அறிவியலை நம்பினால் கதையை நம்பக்கூடாது,
பழைய கதையுடன் ஆன்மீகத்தை கலக்கக்கூடாது என்றேன். நாலாங்கிளாசில் படிச்சது நமக்கு ஞாபகமிருக்கு, ஆன்மீகத்தை கலந்தால் நேற்றைய வரலாறுகூட தெரியாது. 72,000 வருசத்துலயே வாழுதுக.


நன்றி: முகனூலில்
ராஜா ராசா இன் இடுகை ஐ Kandasamy Sapapathy பகிர்ந்துள்ளார்.
ராஜா ராசா உடன் Balasubramanian Kovai.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (9-Aug-16, 7:20 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 322

மேலே