வேர்களை தேடி

வேர்களை தேடி

கொட்டி தீர்த்த அடைமழையில்
சிக்கி தவிக்கிது விவசாயி மனசு
காத்தால நட்டுவச்ச நாத்து
என் ஆச்சோனு நினச்சு

அழகான பூக்கள் கவரயில
அமைதியாவே கிடக்குது
பூமிக்க அடியில கம்பீரமான
துவக்க வேரு

யாராவது பாத்துப்புட்டா
கண்ணு பட்டுருமுனுதா
படைச்ச கடவுள் அதை
புதச்சு வச்சானோ

புதச்சு வச்சதெல்லாம்
பொக்கிசமா ஆகுமுனு
யாருக்கு தெரிய போகுது
நாகரீக உலகத்துக்கு

வருங்காலத்துல தேடி தேடி
அலைய போகிறோம்
மரம் நாட வேரை தேடி
கிடைப்பது சத்தேகமே

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (10-Aug-16, 10:48 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : verkalai thedi
பார்வை : 431

மேலே