மனிதி

தங்கமே வைரமே என
கொஞ்ச நான்
அழகு பொருள் அல்ல

மானே மயிலே என
வர்ணிக்க நான்
ஐந்தறிவினங்களில் ஒன்றல்ல

நிலவே மலரே என
ஒப்பிட நான்
இயற்கை காட்சி அல்ல

சிற்பமே ஓவியமே என
வாஞ்சிக்க நான்
காட்சி பொருள் அல்ல

தேனே கனியே என
புகழ நான்
உண்ணும் பொருள் அல்ல

உன்னுடன் உயிரோடு
வாழும் மனிதி நான்

வாஞ்சை மொழி தேவை இல்லை எனக்கு
வாய்மை மொழி தேவை

கொஞ்சும் பேச்சு தேவை இல்லை எனக்கு
கொஞ்சம் மரியாதை தேவை

தேன் சொற்கள் தேவை இல்லை எனக்கு
தோள் தரும் தோழமை தேவை

தருவாயா மனிதா???

எழுதியவர் : ப்ரீத்தி (11-Aug-16, 12:35 pm)
பார்வை : 407

மேலே