prethy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : prethy |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 28-Jun-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 270 |
புள்ளி | : 89 |
வெற்றி பெற்றவர்களை விட
தோல்வியுற்றவர்களுக்கே நிரந்தரமாக
கிடைக்கிறது
காதலெனும் பரிசு
ஏன் வந்தாய் ?
எதை தேடி வந்தாய்?
உன்னை பிரிந்த அன்றே
என் உயிரும் பிரிந்ததென்றறியாமல்
நீ இல்லாத
இந்த வாழ்வில்
இமை அறியாமல்
அழ கற்று கொண்டேன்
சந்தோசம் இல்லாமல்
சிரிக்க கற்று கொண்டேன்
உயிரில்லாமல்
உலவ கற்று கொண்டேன்
உன் காதலால்
மீண்டும் உயிரூட்ட எண்ணாதே
என்னை
பிணமாகவே வாழ விடு
ஏன் வந்தாய் ?
எதை தேடி வந்தாய்?
உன்னை பிரிந்த அன்றே
என் உயிரும் பிரிந்ததென்றறியாமல்
நீ இல்லாத
இந்த வாழ்வில்
இமை அறியாமல்
அழ கற்று கொண்டேன்
சந்தோசம் இல்லாமல்
சிரிக்க கற்று கொண்டேன்
உயிரில்லாமல்
உலவ கற்று கொண்டேன்
உன் காதலால்
மீண்டும் உயிரூட்ட எண்ணாதே
என்னை
பிணமாகவே வாழ விடு
வந்துப் பாருமய்யா எங்க கிராமத்து அழக...
பொத்தல் குடுசக்குள்ள
பிரியாத உறவிருக்கும்...
கத்த நோட்டுக்குள்ள
காதலுந்தான் ஏதய்யா!
ஓடதண்ணி குடிச்சிருந்தா
அமுதத்த மறந்திருப்ப...
தெணங்கஞ்சி ருசிச்சிருந்தா
உஞ்சொத்தையே கொடுத்திருப்ப!
வெளஞ்ச நாத்துக்குள்ள
வெவசாயி உசுரிருக்கும்...
வெங்காயம் கடிச்சுக்க
பழையகஞ்சி காத்திருக்கும்!
ஏசிகாத்துக்கு நாங்க
ஏங்கி நின்னதில்ல...
பச்சையோல தென்னக்குள்ள
தென்றலும்வர மறந்ததில்ல!
பள்ளாங்குழிக்குள்ள
பொண்ணோட மனசிருக்கும்...
பச்சகுதுர தாண்டுறதுல
பசங்களோட பொழுதிருக்கும்!
கொழந்தைக்கு சோறூட்ட
வான்மகளும் காத்துநிப்பா...
இருட்டுக்கு தொணையாத்தான்
தங்கமே வைரமே என
கொஞ்ச நான்
அழகு பொருள் அல்ல
மானே மயிலே என
வர்ணிக்க நான்
ஐந்தறிவினங்களில் ஒன்றல்ல
நிலவே மலரே என
ஒப்பிட நான்
இயற்கை காட்சி அல்ல
சிற்பமே ஓவியமே என
வாஞ்சிக்க நான்
காட்சி பொருள் அல்ல
தேனே கனியே என
புகழ நான்
உண்ணும் பொருள் அல்ல
உன்னுடன் உயிரோடு
வாழும் மனிதி நான்
வாஞ்சை மொழி தேவை இல்லை எனக்கு
வாய்மை மொழி தேவை
கொஞ்சும் பேச்சு தேவை இல்லை எனக்கு
கொஞ்சம் மரியாதை தேவை
தேன் சொற்கள் தேவை இல்லை எனக்கு
தோள் தரும் தோழமை தேவை
தருவாயா மனிதா???
தனிமை
அம்மாவை இழந்தவனுக்கு தனிமை
பாசத்திற்கு ஏங்கி நிற்பது
அப்பாவை இழந்தவனுக்கு தனிமை
பாதுக்காப்பற்றது
சகோதரர்களை இழந்தவனுக்கு தனிமை
வெறுமையானது
காதலியை இழந்தவனுக்கு தனிமை
வாழ்க்கை நரகமானது
துணையை இழந்தவனுக்கு தனிமை
வாழ்க்கையே போனது
தனிமையில் இருந்து யோசித்தால்
இறுதியில்
அதுவே நிரந்தரமானது.........
மலர்ந்த பூ போல்
இருந்த அவளை;
மென்மையே உருவான
அவளை;
வேட்டையாடியது ஒரு
ஆறறிவு படைத்த
மிருகம்.
ஆனால் இன்று
வலியால் துடிப்பதும்
விழியால் அழுவதும்
வழியின்றி தவிப்பதும்
அந்த மென்மை
உள்ளம் கொண்ட
பெண்மை மட்டுமே.............!
கட்சிகள் மாறின
கொடிகள் மாறின
ஆட்சி மாறின
ஆனால் இன்றும் மாறாதது
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்"
மட்டுமே!!!