என் வாழ்க்கை

கண்களில் ஈரத்துடன் கவி வரைந்தேன்..
மனம் இருதுண்டானபோதும் புன்னகைத்தேன்..
புன்னகையால் அழகிய வார்த்தையால்
பிறர் உள்ளம் கவர தெரிந்த எனக்கு..
பொய்யான அன்பு புரிந்த போது புகைந்தது மனது..
அன்பெனும் தேவதைக்கு ஆராதனை தொடுத்தேன்..
ஆறுதல் கூட கிடைக்கவில்லை..
பொட்டல் காட்டில் விதைத்த விதையாய் நான்..
என்று அன்பு மழை பொழியும் நான் தளிர் விட..
மெல்லினமானது காதல்..
கனமானது காதலியின் பேச்சு..
காதல் தோழ்வியில் தற்கொலை செய்யும் கோலை அல்லவே நான்..
தாய் தந்தைக்காய் வாழ துடிக்கும் வீரனும் அல்லவே நான்..
உணர்வற்ற உடலாய் நான்..
காதல் தோழ்வியில் கண்ணீர் துடைக்க பல கைகள் உண்டு..
வாழ்க்கை தோழ்வியில் வழி நடத்த யார் வருவார்..??
புழுதி அடைந்து புதையுண்ட புத்தகமாய் என் வாழ்க்கை..
அதை புரட்டி பார்க்க யார் வருவார்..
தயவு செய்து புரட்டி பாருங்கள்..
புதையுண்ட புத்தகத்தில் எத்தனை எத்தனை பூகம்பங்கள் என்று..!!
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (12-Aug-16, 9:21 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : en vaazhkkai
பார்வை : 304

மேலே