கண்ணாடி

கண்ணாடி

ஊர் திருவிழா நடக்கயில
ஓட்ப்பந்தயம் வச்சாக
செல்ல மகள் ஆசைக்காக
போட்டியில கலந்துகிட்ட

முதல் பரிசு கண்ணாடி
எனக்கு அது வேனுமுனு
அழுது புளம்பயில எனக்கு
எங்க இருந்து வந்ததுனு தெரியல
அவ்வளவு வேகம்

முதல் பரிச வாங்க மேடைக்கு
கூப்புட்டப்போ போடி ராசாத்தினு
என் மகள அனுப்பி வச்ச

அந்த கண்ணாடிய பாத்து
அவ பட்ட சந்தோஷம்
என் வாழ்க்கையில மறக்க முடியாது

அந்தி மசங்குன ஒரு நாளு
வயித்த வலிக்குதுனு கத்திப்புட்டா
என் புள்ள என்னமோ ஏதோனு
மருத்துவச்சிய கூப்புடயில

பெரிய மனிசி ஆயிட்டானு
செல்லயில நா பட்ட சந்தோஷம்

அன்னக்கு அவ பாத்த கண்ணாடி
இன்னமும் அலங்கரிக்கிது
என் வீட்டு அளமாரிய

கல்யாணம் பண்ணி வச்சு
சீதனமா தங்கம் கொடுக்கயில
உதரி தல்லிப்புட்டு ஓடி போயி
எடுத்து வந்தா அந்த கண்ணாடிய

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (12-Aug-16, 9:22 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : kannadi
பார்வை : 1063

மேலே