நடைவண்டி

சின்ன சின்ன நடைவண்டி
வண்ண வண்ண நடைவண்டி
சின்ன சின்ன குழந்தைகளுக்கு
உற்ற தோழன் நடைவண்டி
வீடு முழுதும் ஓடிடும்
சாலை மேலும் ஏறிடும்
எதிரே எதிர்த்து எவர்வந்தாலும்
இடித் திடாமல் ஒதுங்கிடும்
மெல்லச் சத்தம் செய்திடும்
குழந்தை நடக்க உதவிடும்
தக்காப் பிக்கா குழந்தைகளை
நிமிர்ந்து நடக்க வைத்திடும்
குழந்தை பருவம் நினைத்திட
மகிழ்ச்சி பொங்கி வருகுது
பரணின் மேலே ஒருவண்டி
என்னைப் பார்த்து சிரிக்குது
வயது கொஞ்சம் ஏறிட
பழைய வண்டி ஆனது
சின்ன மிதிவண்டி வர
ஒதுங்கி ஓய்வில் போனது
நடை பழக்கிட வந்தது
பணியை கருத்தாய் செய்தது
மரத்தால் உருவம் பெற்றது
எடையே யில்லா நடைவண்டி..
வண்டி வண்டி நடைவண்டி
பெரியோர் மறந்த நடைவண்டி
குழந்தை நடக்க பழகும்வேளை
வாழ்வில் உதிக்கும் நடைவண்டி