குழந்தை

பால் வாசம் உடையவனே!
உன் சிரிப்பால் கவர்ந்து ஈர்ப்பவனே!
உன் கன்னம் காட்டி
முத்தம் பதிக்க வைப்பவனே!
உன்னை கொஞ்சும் போது
மனயழுத்தம் குறைப்பவனே!
உன்னுடன் விளையாடும் போது
உலகை மறக்க வைப்பவனே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (13-Aug-16, 10:24 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 2109

மேலே