தீபா-- ஒலிம்பிக்ஸ்
திரிபுராவில் பிறந்த தங்க மீனே
தடம் புரளாமல் இறுதி சுற்றுவரை சென்று
தங்கத்தை இழந்தாலும் அனைவரின் மனங்களில் தங்கி
ஒளிர்விடும் தீபமாய் திகழ்கிறாய்
தீபா
பதக்கம் பெறவில்லை என்று பதறாதே
உன் விடாமுயற்சி ஒரு விலை மதிப்பற்ற பலனே !
துயர்வடையாமல் மேலும் பல துள்ளல்களை புரிய இந்ததிருநாடு
நன்கு புரிந்து வாழ்த்துகிறது !