ஞாபகமறதி
என்னை பல இன்னல்களுக்கு ஆளாக்கியவனே!
என்னை பேயாய்
தூரத்தியவனே!
நீ என்னை தீண்டும் போது
சில இடங்களில்
வருந்துகின்றேன்!
சில இன்பங்களை
மறக்க வைக்கும் போது...
பல இடங்களில்
மகிழ்கின்றேன்!
பல துன்பங்களை
மறக்கவைக்கும் போது...
ஞாபக மறதியும் சுகம் தான்
அதை அனுபவித்தால்....
இப்படிக்கு
ப.தவச்செல்வன்