நிஜமாய் நீ ஆனால்............

துன்பம் வரும் வேளையிலே
தூயவளே உன்னை நினைத்தால்
தூரப் போனதடி !

இன்பமான தருணங்களில்
இனியவளே நீ வந்தால்
இருமடங்கு பெருகுதடி !

தோல்வி அடையும் போது
தோழியே நீ வந்தால்
தூசு போல ஆனதடி !

வெற்றி பெறும்போது
வெண்பூவே நீ வந்தால்
வானம் சிறியது ஆனதடி !

கனவில் தோன்றிய என்
கற்பனையே ! நிஜமாய் நீ ஆனால்
நிழலாய் உன்னை தொடர்வேன் ..............


எழுதியவர் : GOKILAMANI (27-Jun-11, 12:36 pm)
சேர்த்தது : கோகிலாமணி
பார்வை : 282

மேலே