தூது போ காற்றே
தூது போ காற்றே:
அழகான மாலைப் பொழுது
மயக்கும் அவள் விழுது
ஆதவன் மறையும் பொழுது
அகம் மலரும் அப்பொழுது
பூக்கள் கொண்ட சாலை அது
முகத்தைப் பார்த்தேன் முழு நிலவு
காற்றை அனுப்பினேன் கண் இமையைத் தீண்டின
கருவிழி இருவிழி என்னை நோக்கி
கல்லறை என்று கவி சொன்னது
அவளின் ஒற்றை முடி வருடுகிறது என்னை
காற்றே காதல் சொல் என்றேன்
அவளை அடைந்து சுகமென்று
அவளைச் சுற்றின
இதழ் வரை அல்ல இதயம் வரை
அச்சுகம் எனக்கு இல்லையா
வார்த்தைகள் வடித்தேன் காதலை சொல்ல
புயலாய் புகுந்தது
அவளின் பூ விழியைக் கண்டு
கலைத்தது என் காதலை காற்று
காதலே காதலே தூது போ காற்றாய்…..