காதல் கற்பனை

உற்சாகத்தோடு ஆரம்பிக்கும்
காலை பொழுது....!

கை கோர்த்து பேசிக்கொண்டு
போகும் நகர வீதி...!

ரிமோட்டிற்காக ரகளை செய்யும்
நம் இரு கைகள்...!

அன்போடு இருவரும் பரிமாறி
சாப்பிடும் நேரம்....!

காதலின் அடையாளமாய் நீ
தரும் சிறு சிறு பரிசுகள்...!

கோபப்பட்டால் சமாதான படுத்த
நீ கெஞ்சும் மழலையின் சுபாவம்...!

நான் பார்த்திராத போது
என்னை பார்த்து ரசிக்கும்
உன் கண்கள்....!

சோகமான தருணங்களில்
உன் மார்போடு முகம்
புதைக்க ஏங்கும் நான்...!

இரவில் தலையணையில்
பிரியமாய் சண்டையிடும்
விளையாட்டு.....!

இவை அனைத்தையும் காதலை கற்பனை செய்து வைத்தேன்...
ஆனால் அது கண்ணீருடன் கரைந்து
போனதேனோ .....??

எழுதியவர் : Anushiya சுதர்சன் (20-Aug-16, 7:38 pm)
Tanglish : kaadhal karpanai
பார்வை : 216

மேலே