மெய்யுடன் முடிவது காதல் வார்த்தையா வாழ்க்கையா
கொடியில் பூத்த மலரும் உதிரும் ஒரு நாள்,ஆனால்
மனதடியில் பூத்த காதல் என்றும் உதிராது...
உன் உதிரம் உரையும் நொடி வரை,
உன் இதயம் உருக்கி வாழும்.
இருக்கையில் அமர முடியாமல் உன்னை துடிக்க விடும்,
இரு கை சேர்ந்த பின்னே உன் அச்சம் தடுக்கி விழும்.
பெற்றவரை நேசிக்காததனால் வருவது காதல் என்றனர்.
பெற்றவரை நேசிக்காததனால் வருவது காதல் அல்ல,
பெற்றவரோடு சேர்த்து மற்றவரையும்,
தனக்கு ஏற்றவரையும் நேசப்பதே காதல் ஆகும்.
மெய்யுடன் முடிவது காதல் வார்த்தை மட்டுமல்ல,
காதல் வாழ்க்கையும் தான்.