கல்விக் கடல்

கறைபடியாக் கல்விக் கடலில்
கலக்க வருகுது
காதல் அலைகள். -
அலைகள் ஓய்வதில்லை - எந்த
அலைகள் ஓய்வதில்லை?
கல்விக் கடலின் அலைகளா?
கலக்க வந்தக் காதல் அலைகளா?
நூலுக்குத் தான்
ஊசி என்ற ஆனப் பின்
ஊசிக்குள் நூல் நுழைய மறுப்பதேன்?
அறிவுக்குத்தான் கல்வி என்ற
ஆனப் பின் கல்விக் கடலின்
அலைகளில் நனைய மறுப்பதேன்?
கல்விக் கடல் அலையில்
கவனத்தை செலுத்தியவன்
காதல் அலையில் சிக்குவதேன்.
காதல் அலைகள் - உன்
காலத்தை அடித்து சென்றுவிடும்.
காற்று வீசினால்தான்
கடலில் அலைகள் உயிர்த்தெழும்.-நீ
குறிக்கோளில் இருந்து நழுவினால்தான்
காதல் அலைகளில் நீ
அடித்து செல்லப்படுவாய்.- இளைஞனே
கல்விக் கடலில் உன் குறிக்கோளினை
கடந்து செல். - காதல் அலைகளில்
கவனத்தை திருப்பாதே.
கடல் வற்றுவதில்லை. - காதல்அலைகள்
கணக்குகள் ஆவதில்லை.
கடல் படகுகளை சுமப்பதைப் போல் - நீயும்
குறிக்கோளினை சுமந்து
கல்விக் கடலில் நீந்தி எழு.
காதல் அலைகளுக்கு நீ
பயந்து விடாதே.

எழுதியவர் : ச.சந்திரமௌலி (21-Aug-16, 3:48 am)
Tanglish : kalvik kadal
பார்வை : 145

மேலே