ஓவர் ஆக்ட்

" புக் எடுத்து வெச்சி படிக்கவே மாட்டேங்குறான்.. சும்மா சுத்திட்டே இருக்கான்" இதான் தினமும் என் Wife பாடற பல்லவி..

இது இன்னிக்கு நேத்தில்ல.. 5 வருஷமா நடக்குது..

இதே தான் சின்ன வயசுல எங்க அம்மாவும் என்னைய பாத்து பாடிட்டே இருப்பாங்க..

அத பாத்துட்டு ஒரு நாள் எங்க தாத்தா எனக்கு ஒரு அட்வைஸ் பண்ணினாரு..
அதுக்கு அப்புறம் எங்கம்மா திட்ற மாதிரி நான் நடந்துக்கலயே..
இப்ப அத என் பையனுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு..

போன வாரம் உக்கார வெச்சு சொல்லிட்டேன்..

அப்புறம் பாக்கணுமே பையன்கிட்ட மாற்றத்தை.. எப்பவும் புக்கும் கையுமாவே இருந்தான்..

இத பாத்துட்டு என் Wife-க்கு அதிர்ச்சி + ஆச்சரியம்..

"அப்டி என்ன அவனுக்கு அட்வைஸ் பண்ணுனீங்க"-னு திரும்ப திரும்ப கேட்டுட்டே இருந்தாங்க..

ஆனா நான் சொல்லலியே...

"அது பிரம்ம ரகசியம்.. வெளியே சொன்னா பலிக்காது"னு சொல்லிட்டேன்.

நேத்து ஈவினிங்.. சினிமாவுக்கு கெளம்பிட்டு இருந்தோம்..

அப்ப என் பையன் கையில புக் எடுத்துட்டு தியேட்டர் வர ரெடியா இருந்தான்.. அத பாத்துட்டு என் Wife..

" என்னடா கையில..? "

" இன்டர்வெல்ல அரைமணி நேரம் கேப் கெடைக்கும்லம்மா.. அப்ப படிக்க.. "

இத கேட்டதும் என் Wife-க்கு மயக்கம் எதுவும் வந்துடுமோனு நான் அவங்க மூஞ்சையே பாக்க..

வந்தது மயக்கம் இல்ல.. டவுட்டு..!!

அவனை அப்டியே தனியா தள்ளிட்டு போயி உருட்டி மிரட்டி கேட்டதுல பய பிரம்ம ரகசியத்தை உளறிட்டான்..

" அப்பாதான்மா சொன்னாரு.. நீ படிக்கலன்னா கூட பரவாயில்ல.. படிக்கிற மாதிரி நடினு.."

# அடங் கொய்யாலே.. ஆக்ட் பண்றான்னா.. இப்டி ஓவர் ஆக்ட் பண்ணி சிக்க வெச்சிட்டானே..!!!

எழுதியவர் : செல்வமணி (20-Aug-16, 11:49 pm)
பார்வை : 274

மேலே