பண்பு
ஒருவரை அவர்
ஒத்தவர் இலையென
ஒருப்பட மறுப்பதே
பண்பெனவோ?
தூய்மையே பண்பெனத்
தகுமெனில்
பழமைக்குள் வீழ்ந்து
வழமைகள் காண்பதுவோ?
கண்டிடில்
எண்ணிய வண்ணம்
எவரும் இலையென
ஏற்கா எம்நிலை
நலமென கொள்வதுவோ?
தெளிவு ஞானம்
இருந்தால்
ஒளிவு மறைவின்றி
பேசிடல் கூடும்.
நோக்கு நல்லதெனில்
போக்கு மாறிடும்.
மேன்மை மனித பண்பதுவே!
ஒத்த தன்மையில் யாரையும்
ஒப்ப எண்ணிடில்
மெத்தப் படிக்கவிலையெனிலும்
சொத்து இலையெனிலும்
வீரம் இலையெனிலும்
மேன்மை கண்டிடல் கூடும்
வித்தகம் யார்க்கும் வாய்க்கும்.
பண்புடைமை
பழமையில் உளதெனும்
பாழ் மனம் மாறும்.
பண்பு புதுமையில் மிளிரும்.
மாறிவரும் உலகின்
மாற்றங்கள் நிகழ்ந்ததெனில்
தேறியறிய தோன்றிடும்.
பண்பு இன்றிவ்வாறென
ஒப்ப எவரையும் ஏற்பமே!