குளத்தில் எழுதிய கவிதை தவக்களை எறிதல்
AN OLD POND
A FROG JUMPS
AND FLASH ! ---HAIKU BY BOSHO
ஒரு பழைய குளம்
தவளை துள்ளி விழுந்தது
நீரின் சிதறல் ! ---பாஷோ வின் ஹைக்கூ
---இதற்கு தத்துவார்தங்கள் எல்லாம் சொல்லறாங்க. நமக்கு புரியலீங்கோ !
நம்ம கவிதைக்கு வருவோம்
அமைதியான ஊர்க் குளம்
சிறுவன் நான் வந்தேன்
உடைந்து கிடந்த மண்பானை ஓட்டுச் சிதறல்கள்
வட்டமாக ஒன்றை எடுத்தேன்
ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையே வைத்து
நீரின் மேற்பரப்பில் கிடையாக விட்டெறிந்தேன் !
துள்ளிச் சென்ற ஒட்டுச் சில்
எண்ணற்ற நீரலை வட்டங்களை இட்டுச் சென்றது
அமைதிக் குளத்தின் எல்லை வரை ....
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் !
---கவின் சாரலன்
சியோலிலிருந்து ரியோ வரை நீச்சல் குளம் வெட்டி நீச்சல் போட்டி நடத்துகிறார்கள்
ஒலிம்பிக்கில் . நாளை நம் நாட்டிலும் நடத்துவார்கள். ஒரு குளம் வெட்டி ஒலிம்பிக்கில்
தவக்களை எறிதல் போட்டி நடத்தக் கூடாதா ? நாட்டிற்கு ஒரு தங்கப் பதக்கம்
வாங்கித் தந்திருக்க மாட்டேனா ? என்று அன்றும் நினைத்தேன் இன்றும் நினைக்கிறேன் .
டிஸ்க் த்ரோ மாதிரி FROG THROW அவ்வளவு எளிதல்ல தோழர்களே !
ஒரு வட்டம்கூட போடாமல் கல்லு மூழ்கிப் போகும் . முயன்று பாருங்கள்