வேண்டாம்

ஒரு வார்த்தையில் அடக்க முடியுமா ஓரப் பார்வையில் பகிர முடியுமா
அள்ளி எடுத்து அப்படியே விழுங்கி உயிர்உரைத்ததிட இயலுமா
சிரிப்பிலா எழுத்திலா கன்னம் கிள்ளியா கைகள் கோர்த்தா
எப்படி அளிப்பேன் அணையுடைத்த வெள்ளமாக ஆர்ப்பரித்து வரும் அன்பை
கட்டுக்கடங்கா காதல் உரு உருக்கி இலக்கு நீக்கி இதயம் சுருக்கி
அழித்தே விடும் அடையாளம் தொலையும்
பார்த்த எதிர் எல்லாம் எள்ளி நகையாடி தள்ளி விழுந்ததே
எண்ணங்கள் அளித்த ஏமாற்றத்தில் ...
வெற்றுப் புன்னகையுடன் விலகுவோம்
வேண்டாம் எனக்காக நீ!

அகராதி

எழுதியவர் : அகராதி (21-Aug-16, 11:16 am)
Tanglish : ventaam
பார்வை : 85

மேலே