புன்னகை மன்னன்
தங்க நகை
தங்கத்தில் வைரம் பதித்த நகை
முத்தும் பவளமும் பதித்த நகை
இன்னும் எத்தனையோ நகைகள்
இவை அத்தனையும் தந்து
என் மனதை மயக்கி
என் மனம் விரும்பா ஆண் மகன் ஒருவனுக்கு
என்னை மணம் முடிக்க
என்னை சார்ந்தோர் முயற்சிக்க
பொன் வேண்டேன்,பொருள் வேண்டேன்
நகைகள் ஏதும் வேண்டேன்
நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று
புன்னகை மலர் ஏந்தும் என் மன்னன் முகம் ஒன்றே
அந்த மலரே நா விரும்பும் பூ

