வசியம் செய்தாயோ

சிகரெட்..
பல வண்ணங்களில் நீ
இல்லை என்றாலும்
பலர் எண்ணங்களில்
உதிப்பாயோ..

நீ ஆபத்து என்று
தெரிந்தும் உன்னை
அனு அனுவாய்
புசிக்க ஆசை..

என்ன செய்தாய் என்னை..??

உன்னுடன் வாழ்நாள்
முழுதும் இணைந்திருக்க
எம்மை வசியம் செய்தாயோ..

எம் சுவாசத்தில்
களந்தென்னை
கவி செய்ய அழைத்தாயோ..

நீ பகை
என்று தெரிந்தும்
பாராட்ட துடிக்கிறது
மனது..

என் வாழ்வில்
என்றோ இணைந்தாய்
இன்று இணை பிறியா
நண்பனானாய்..

புகை பலருக்கு பகை
எனக்கு இணையோ..

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்..

கவிதைக்கு இடம் பொருள் ஏவல் உண்டு..
ஆனால் எந்த இடத்தில் உதிக்கும் என்பது எவருக்கும் தெரியாது..

அப்படித்தான் இதுவும்..

தவரிருந்தால் மன்னிக்கவும் தோழமைகளே..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (25-Aug-16, 9:24 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 325

மேலே