என் பெண் தோழி
முதல் நாள் கல்லூரியில் சந்தித்த ஞாபகம், தயங்கி பேசிய தருணம்...
என் தமிழ் ஏனோ தத்தளித்து போனது அன்று......
பின் இருவரின் வார்த்தைகளும் உரச தொடங்கியது.....
ஒரு வேலை அவள் என்னை காதலிக்கிறாளோ என்று நானும், ஒரு வேலை அவன் என்னை காதலிக்கிறானோ என்று நீயும் நினைத்துப்பார்த்ததுண்டு......
பின் புரிதலின் போக்கில் புரிந்து விடும் நமக்கே இது காதலுக்கும் அப்பாற்பட்ட நட்பு என்று .....
ஆண் பெண் பாலினம் பலி செய்யப்படும் ..
கருவில் இருந்து வெளியேறும் குழந்தையாய் வெளியானோம் கல்லூரியை விட்டு......
எப்படியோ பிரிவானோம் இருவரும் எங்கோ தொலைந்தும் போனோம்...
காலமும் உருண்டோடியது,பின் உனக்கு திருமணம் ஆனதை என் நண்பர்கள் மூலம் அறிந்தேன்,என் குடும்பம் பற்றி உன் தோழிகள் மூலம் அறிந்திருப்பாய் நீயும்....
இப்போது உன் பையன் ஆணாக வளர்ந்து விட்டான்,என் பிள்ளையும் பெண்ணாக மலர்ந்துவிட்டாள், இவர்களுடன் பொழுதுகள் போயின........
உலகம் சிறியது போல் இருவரும் ஒரு நாள் காண நேர்ந்தது...
நரைத்த முடியுடன் நானும் ,சுருக்கிய தோலுடன் நீயும் இருந்த போதும்......
இலை மேல் தங்கிய நீர் போல் மனம் மேல் தங்கிய நினைவுகள் தோன்றியது கண் முன்னே....
முன்பு போல் வார்த்தைகள் வசம் வரவில்லை,கண்கள் மட்டும் மௌனத்தில் பேசிக்கொண்டது.......
நாம் செய்த குறும்புகள், நம் நண்பர்கள் செய்த சிரிப்பூட்டும் நினைவுகள் பேசுகையில் நம்மை பிரிக்க விரைவாக வந்துவிட்டான் சந்திரன்........
அன்று நம் உறக்கங்கள் உறங்கி போயின.....
ஒரு நாள் நம் இருவரின் உடலும் மண்ணுக்கு உரமாகும்......
அடுத்த ஜென்மத்தில் பிறக்க நேர்ந்தாள் அதிலும் உன்னை கண்டு கொள்வேனாடி என் உயிர் தோழி நீ என........