வாசிப்பை நேசி

புத்தகம் படிக்க படிக்க‌
உள்ளம் தெளிவு பெரும்
இதயம் மகிழ்ச்சி கொள்ளும்
நம்மைச் சேரும் பெருமை

நூலைப் படிக்க படிக்க‌
நேர்மை சிந்தனை பிறக்கும்
கற்றோர் அறிவுரை பிடிக்கும்
சாதிக்க இதயம் துடிக்கும்

புத்தகம் நமக்கு நல்லது
அறிவினை வளர்க்க வல்லது
தீமையைக் குத்தும் முள்ளது
நன்மையே மிகவும் உள்ளது

படிப்பதற்கு தரணும் முன்னுரிமை
படித்தபடியே செயல்படுவதே நம்கடமை
படிக்கும் நூல்களே நமக்கானஉளிகள்
நம்மை திறம்பட செதுக்குபவை

குழம்பிக் கிடக்கும் மனதையும்
ஒரு நிலைப்படுத்தும் புத்தகம்
குழப்பம் இல்லா வாழ்விற்கு
உறுதுணை நிற்கும் புத்தகம்

புத்தகம் படித்திட சபதமெடுப்போம்
எடுத்த சபதத்தை நடத்திமுடிப்போம்
புத்தகம் வாழ்க்கையின் வழிகாட்டி
நம்மை செழிப்பாக்கிடவே அதைநேசி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Aug-16, 8:22 pm)
பார்வை : 366

மேலே