இறப்பும் பிறப்பும்
ஒருத்தி விதவையாகலாம்,
ஒருத்தி தாய் ஆகலாம்,
ஒருவன் தந்தையை இழக்கலாம்,
ஒருவன் தந்தையாகலாம்,
ஒரு பக்கம் பாகப்பிரிவினை நடக்கலாம்,
ஒரு பக்கம் பந்தங்கள் ஒன்று சேரலாம்,
ஒரு பக்கம் அழுதுகொண்டிருக்கலாம்,
ஒரு பக்கம் சிரித்துக்கொண்டிருக்கலாம்,
ஒரு சில சாதனைகள் நிறுத்தபட்டிருக்கலாம்,
ஒரு சில சாதனைகள் துவங்கப்பட்டிருக்கலாம்,
ஒருவன் விட்டுகொடுப்பதால்,
ஒருவன் வாழ்கிறான்.
ஒருவனின் இறப்பும்,
ஒருவனின் பிறப்பும்,
ஒவ்வொன்றின் முடிவும்,
ஒன்றின் துவக்கம்...!