உண்மையை அறிந்து பேசுஉயார்வினை நினைத்துச் செய்

இளமையின் மோகம்
இயற்கையின் தாகம்!
வளமையின் வேகம்
வாய்த்ததின் ஊக்கம்!
பழைமையின் மோகம்
பரம்பரை காக்கும்!

எண்ணித் துணிக கருமமென
-எழுதி வைத்தார் முன்னோர்கள்!
கண்முன் தோன்றும் எதனையுமே
-கருத்தில் வைத்துப் பேசாதே!
பண்பை அதுவும் சோதிக்கும்!
-பலர்முன் உன்னைப் பாதிக்கும்!
உண்மை யறிய முற்படுமுன்
-உரைப்ப தினியும் தவிர்ப்பாயே!

விதித்ததை அறிய வொண்ணா
- விவரமும், உணர மாட்டோம்!
விதித்ததைப் புரிந்து கொள்ள,
-வேண்டிய செயல்கள் செய்யோம்!
விதித்ததை அறியும் வண்ணம்,
-வேண்டிய முயற்சி செய்யின்,
விதியென நொந்து கொள்ள,
-வேண்டிய தில்லை! நண்பா!
====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியேல் (29-Aug-16, 7:52 am)
பார்வை : 51

மேலே