நேசிக்கிறேன்
காட்சியாய் வருவாய் என்று
கண்களை நேசிக்கிறேன்
கனவாய் வருவாய் என்று
உறக்கத்தை நேசிக்கிறேன்
நினைவாய் வருவாய் என்று
தனிமையை நேசிக்கிறேன்
சுவாசமாய் வருவாய் என்று
காற்றை நேசிக்கிறேன்
இவை அனைத்துமாய் வருவாய் என்று
உன்னை நேசிக்கிறேன்
உனக்காக காத்திருக்கிறேன்
என் ஆயுள் முழுதும் உனக்கு அர்பணித்து