முண்டாசுக் கவி

எம் தமிழே !,

எம் தமிழ் தாயின் புதழ்வனே!,

நீ அருந்தியப் பாலில் தமிழை கலந்துக் கொடுத்துவிட்டாலோ, அந்தப் புன்னியவதி !,

அர்ப்பத்தனமாய் நீயும் அந்தப்
பாலை மிச்சம் வைக்காமல்
குடித்துவிட்டாய்ப் போலும் !,
உனக்குப் பின் வந்தவர்களுக்கு
உன் அளவிற்கு வார்த்தைகள்
சிக்கவில்லையே!,

முண்டாசுக் கட்டி தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட
கவி மன்னா!,

நீ முறுக்கிய மீசையில்தான்
தமிழும் கொஞ்சம் திமிரைக்
கற்றுக் கொண்டது!,

உன் ஒரு கையில் கம்புன்றி
நின்றாய், மறுக் கையில்
எழுதுகோள் உன்றி தமிழை
நிமிரச் செய்தாய்!

அடடா!, எத்தனை எத்தனைப்
பாடல்கள், அதைக் கேட்டால்
சேவிகள் கூட நாவ்க்கொண்டு
சுவைக்கும் அளவிற்கு
இனிமையான வரிகள்!,

ஆனால் எப்பாட்டில் பிழைக்கண்டு யானை உன்
தலையில் கொட்டியதோ
தெரியவில்லை ?!,

நீ மறைந்தாய் உன்
தமிழ் என்றும்
மறையாது!!!..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (30-Aug-16, 11:08 pm)
பார்வை : 272

மேலே