பலவாறாக

பல கோடி வேண்டி
பலப் பல வியூகங்கள்
வகுக்க

பல சக்தி வேண்டி
பலப்பல ஹோமங்கள்
செய்து.

பல காரியங்கள் நடக்க
பலப்பல வேண்டுதல்கள்
அர்ப்பணித்து.

பலப் பல என்று பெருக்கி
பலவற்றையும் கூட்டி
பலவாக அளந்து.

பலவாறாக வாழ்ந்தான்
இங்கொன்றும் அங்கொன்றும்
குடும்பமாக

பல தாரங்கள் பல பழக்கங்கள்
பலமுறை தடுமாற்றங்கள்
என்று பலமிழந்து கொண்டு

பல வாகில் பலவழியில்
சிறுமைப்பட்டு வாழ்கிறான்
பலவேந்தன் என்றவாக்கில்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Aug-16, 4:14 pm)
பார்வை : 133

மேலே