என்னவளே
பெண்மயிலே உன் அண்மையிலே
மனம் கரைந்திடத் தோணுதடி!
உண்மையிலே உன் கண் மையிலே
நான் தொலைந்திட வேண்டுமடி!
உன் பாதங்களில் நான் படையலிட்டால்
என் பாரங்கள் தீருமடி!
பூவிழியே உன் பொன்மொழியில்
என் காயங்கள் ஆறுமடி!
இந்த பூமியிலே நாம் வாழ்வதற்கு
நூறாண்டுகள் தேவையடி!
யாசகனாய் நான் காத்திருந்தேன்!
என் ஆசைகள் சேர்த்திருந்தேன்!
கண் வழியும் கனா எடுத்து
என் காதலில் கோர்த்திருந்தேன்!
பாவலனாய் நான் பாட்டெழுதி,
என் ஏக்கங்கள் தீர்த்திருந்தேன்!
பால்முகமே உன் பார்வையிடம்
என் போர்களைத் தோற்றிருந்தேன்!
ஓர் தீவிலே எறிந்திடும் தீயென
நான் தனிமையில் காய்ந்திருந்தேன்!
உன் தேன்மொழி ஒருமுறை தீண்டிட
தேன்மழையினில் நான் நனைந்தேன்!
புரியாத மொழி இந்த காதல் வலி
தினம் மௌனத்தில் நான் தொலைந்தேன்!
பூமகளே என் புதிர் மலரே
நான் உனக்கென சேர்த்திருந்தேன்
மூச்சு வழி வரும் காற்றிலுமே
உன் பூவிழி வாசனையை!