எனக்குள் நான்
என் மனதை ஆக்ரமிக்கும்
அழகான வார்த்தைகள் எல்லாமே
எனக்குள் சிரிக்கிறது கவிதையாய்..
அழகான அதிகாலை பொழுது.
அற்புதமான அந்திமப் பொழுது
சொக்கிப் போகிறேன்..
சுகமாய் உணர்கிறேன். ..
என் வீட்டு தோட்டத்தில்
எனக்கான ஒரு மஞ்சள் ரோஜா...
மனதோடு பேசி என்
மவுனத்தை கலைத்தது..
சுகமான தென்றல் வந்து
சிலிர்க்கச் செய்கிறது ....
என் உடல் எங்கும் புது சுகமாய்
தீன்டிப் போகிறது....
இயந்திரமாய் இத்தனை நாள்
எங்கிருந்தாய் என் இதயமே....
எனக்குள் நான் கேட்டுக் கொள்கிறேன்