காதல் ஒரு கருவறை

கனவு ஒரு கருவறை
அங்கே
கவிதைகள் பிறப்பெடுக்கும் !

காதல் ஒரு கருவறை
அங்கே
வாழ்வு பிறப்பெடுக்கும் !

கற்பனை ஒரு கருவறை
அது
ஆகாயத்தையே தன்னுள் அடக்கும் !

நெஞ்சம் ஒரு கருவறை
அங்கே
எண்ணிலா எண்ணங்களின் ஜனனம் !

இந்த ஜனனங்களுக்கு
ஒரு நாளும் மரணம் இல்லை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-16, 4:53 pm)
பார்வை : 153

மேலே