ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம்.... பாகம் -08
வினோ எதிலும்
ஈடுபடாமல் தனிமையில் இருந்தாள்.அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை அவளின் சிந்தனையில் அவளது அன்பு தங்கையின் நினைவே வந்தது.
. தலைவர் இதனை அவதானித்துக் கொண்டே இருந்தார்.மாலை இறைவழிபாடு நடைபெற்று தலைவர் செல்வதற்கு ஆயத்தமானார்.வினோ வந்து தலைவருக்கு முன்னால் நின்று,
"என்னைய எப்ப என்ட வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடுவீங்க......?
என்று அப்பாவி முகத்துடன் கேட்டாள்.
அவளின் கேள்விக்கு உடனே எந்த பதிலும் கூறாமல் சிரித்துக் விட்டு பின்,
"இது தான் உன்ட வீடு ;நீ இங்கு எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்....."
என்று கூறி விட்டு சென்று விட்டார்.இப்படியே ஒரு வாரம் கடந்தது.
வினோவுடன் அவ் இல்லத்தில் இருக்கும் ஒரே ஒரு பெண் அடிக்கடி வந்து கதைப்பாள்.அவளின் பெயர் மாலதி அவளுக்கு ஒரு முப்பது வயது இருக்கும். அவள் ஒரு விடுதலை போராளி அவள் விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டது பத்து வயதிலாம்.இதனை அப்பெண்ணே வினோவுக்கு அவளின் வாயாலே கூறினாள்.
அவளின் அன்பால் மோய்சிலிர்த்தாள் வினோ. எல்லா சிறுவர்களும் கல்வி கற்க பாடசாலை சென்றனர்.ஆனால் வினோ தான் பாடசாலை செல்ல வில்லை என்று அடம்பிடித்து அழுதாள்.அப்பொழுது மாலதி அக்கா சென்று வினோவிடம் கேட்டார்,
"உனக்கு படிக்க ஆசையில்லையா ? ஏன் வினோ பாடசாலை செல்ல மறுக்கிறாய்...." என்று செல்லமாக கேட்டார்.அதற்கு அவள்................
தொடரும்.........

