நட்பின் வாசம்

நம் நட்பு......
மணலும் துகளும்
வானும் விண்மீனும்
சூரியனும் ஒளியும்
வலியும் மருந்தும்
உழியும் சிலையும்
நம் நட்பு.....
கடலும் அலையும்
தென்றலும் மரமும்
வேரும் நீரும்
விளியும் இமையும்
இதயமும் துடிப்பும்
நம் நட்பு.....
ராகமும் பாடலும்
மொழியும் தமிழும்
பற்களும் இதழும்
சொல்லும் கவிதையும்
மண்ணும் விதையும்
நம் நட்பு.....
முக்கனியும் சுவையும்
கவியும் அவையும்
காற்றும் அணுவும்
நிமிடமும் நொடியும்
உயிரும் நாடியும்