பிரசன்னா கு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரசன்னா கு |
இடம் | : namakkal |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 503 |
புள்ளி | : 6 |
Civil engineer & lyrics writing & singing
நம் நட்பு......
மணலும் துகளும்
வானும் விண்மீனும்
சூரியனும் ஒளியும்
வலியும் மருந்தும்
உழியும் சிலையும்
நம் நட்பு.....
கடலும் அலையும்
தென்றலும் மரமும்
வேரும் நீரும்
விளியும் இமையும்
இதயமும் துடிப்பும்
நம் நட்பு.....
ராகமும் பாடலும்
மொழியும் தமிழும்
பற்களும் இதழும்
சொல்லும் கவிதையும்
மண்ணும் விதையும்
நம் நட்பு.....
முக்கனியும் சுவையும்
கவியும் அவையும்
காற்றும் அணுவும்
நிமிடமும் நொடியும்
உயிரும் நாடியும்
இதுவா ....உண்மை சுதந்திரம்
வெள்ளைக்காரன் வசம் இருந்து சுதந்திரம் பெற்று தந்தார் காந்தியார்...
ஆதலால் என்ன பயன் இந்த நாட்டில் வறுமையில்லையா?
ஏழைகளில்லையா?
பசித்த வயிறுகள் நிறைகிறதா?
குடிசைகள் கோபுரமாயிற்றா?
வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம் நம் நாட்டு கொள்ளையர்களிடம் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதா?
மக்களின் வரிப்பணங்கள் களவுப்போனது
குடிமக்களின் உரிமைகள் பறிப்போனது
பசி நோயால் ஏழைகள் உயிர்போனது
நீரின்றி விவசாய நிலங்கள் கருகிப்போனது
போராட்டங்கள் மட்டுமே பழகிப்போனது
பள்ளத்தாக்கு நோக்கி பாய்ந்து நிரம்பும் நீர் போலே
செல்வந்தர்களையும், கொள்ளைக்காரர்ளிடமும் தான் பணம் சேர்கிறத
14.08.2016 - இந்த நாள் தமிழர்களுக்கும், தமிழ் திரையுலகிற்கும் மறக்க இயலாத ஓர் கருப்பு தினம் என்றே கூறலாம்
உம்மை போன்று தமிழினை மூச்சாகவும், பேச்சாகவும், உயிராகவும் கருதிய அனைவரையும் இந்த தமிழ் இனம் என்றும் மறவாது என்று நம்புகிறேன்..
தமிழின் ஒரு முத்து காற்றில் மறைந்து விட்டதே
பல கண்கள் ,நெஞ்சங்கள் உன்னால் கலங்கி நின்றதே
நீ மறைந்த நொடியில் நேரம் நீளாது உறைந்து போனதே
உந்தன் வரிகளில் வாழ்ந்திட்ட மனங்கள் உடைந்து போனதே
நான்கு வயதில் அன்னையை இழந்தாய்.....
தந்தையே உனது தாயும் என உணர்ந்தாய்....
பெற்ற அன்னை போனால் என்ன தமிழ் அன்னையின் கைப்பிடித்து வளர்ந்தாய்......
உறவினர்களுடன் உந்தன்
இந்த வாழ்க்கை யாருக்காக வாழ்கிறோம்
எதற்காக வாழ்கிறோம் நாம் செல்லும் பாதை தவறா என உடனே தெரிவது இல்லை?
என் வாழ்க்கையில் பாடல் எனது ஐந்தாம் வகுப்பு பள்ளி பருவத்தில் தொடங்கியது...
கவிதைகள் எழுதுவது பத்தாம் வகுப்பில் தொடங்கியது
அதன் பிறகு பள்ளி வாழ்க்கை முடிவு பெற கல்லூரி வாசல் திறந்தது
நானோ ஒன்றும் தெரியா வயதில் குழம்பினேன்
ஆனால், உனக்கு எதில் விருப்பம் என கேட்க ஒருவருக்கும் மனம் வரவில்லை..
உறவினரின் அறிவுரை கேட்டு விட்டு இதை படி வேலை கிடைக்கும் என கூறினார்கள்....
அந்த தருணம் என்னிடம் உனக்கு எதில் விருப்பம் என யாரெனும் கேட்டிருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்து இருக்கும்.
ஆனால் டிப்ளமோ
பாதி வானவில் வானத்தின் கிறுக்கல்
சட்டொன நிற்கும் திவலை கார்மேகத்தின் கிறுக்கல்
ஜனனமும் ,மரணமும் படைத்தவனின் கிறுக்கல்
மலை பகுதிகளில் பாதைகள் ஒரு கிறுக்கல்
அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் கடந்து போகும் மனித வாழ்வு ஒரு கிறுக்கல்
எழுதுக்கோலின் மதிப்பு ஒரு ரூபாயோ (அல்லது) கோடி ரூபாயோ அதன் பயணம் தொடர்வது ஒரு கிறுக்கலில் தான்
கிறுக்கும் வரை கிறுக்கிடு
வாழும் வரை மகிழ்ந்திரு
போட்டி உலகம் விழித்திரு
முடியும் வரை உதவிடு
முயற்சியோடு போராடு
திறமை உன்னோடு
தீயிருக்கனும் மனதோடு
வா வா தோழா உனக்கென வாசல் திறந்திடும் நாளும் தூரமில்லை
எதற்கும் அஞ்சாதே
எவரிடமும் கெஞ்சாதே
விழிகள் கலங்காதே
க