வாழ்க்கை மாறும் கனம்
இந்த வாழ்க்கை யாருக்காக வாழ்கிறோம்
எதற்காக வாழ்கிறோம் நாம் செல்லும் பாதை தவறா என உடனே தெரிவது இல்லை?
என் வாழ்க்கையில் பாடல் எனது ஐந்தாம் வகுப்பு பள்ளி பருவத்தில் தொடங்கியது...
கவிதைகள் எழுதுவது பத்தாம் வகுப்பில் தொடங்கியது
அதன் பிறகு பள்ளி வாழ்க்கை முடிவு பெற கல்லூரி வாசல் திறந்தது
நானோ ஒன்றும் தெரியா வயதில் குழம்பினேன்
ஆனால், உனக்கு எதில் விருப்பம் என கேட்க ஒருவருக்கும் மனம் வரவில்லை..
உறவினரின் அறிவுரை கேட்டு விட்டு இதை படி வேலை கிடைக்கும் என கூறினார்கள்....
அந்த தருணம் என்னிடம் உனக்கு எதில் விருப்பம் என யாரெனும் கேட்டிருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்து இருக்கும்.
ஆனால் டிப்ளமோ படிக்க வைத்தார்கள், பொறியியல் படிக்க வைத்தார்கள்
இப்போ எல்லாம் முடித்தேன்
வேலை இல்லை
நிம்மதி இல்லை
தூக்கம் இல்லை
போக போக வாழ்க்கையும் இல்லாமல் போகிவிடும் போலும்...
அன்று யாராவது என் விருப்பத்தை கேட்டிருந்தால் எனது மூச்சான இசைத்துறையில் பயின்று இருப்பேன்
எல்லாம் முடிஞ்சிப்போச்சு... ஆனால் என்ன முயற்சி எனும் சக்தி என்னிடமுள்ளது
என்னால் சாதிக்க முடியும்
தடைகளை கடக்க முடியும்
தோல்விகளை உடைக்க முடியும்
லட்சியத்தை அடைய முடியும்