கிறுக்கும் வரை கிறுக்கிடு

பாதி வானவில் வானத்தின் கிறுக்கல்
சட்டொன நிற்கும் திவலை கார்மேகத்தின் கிறுக்கல்
ஜனனமும் ,மரணமும் படைத்தவனின் கிறுக்கல்
மலை பகுதிகளில் பாதைகள் ஒரு கிறுக்கல்
அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் கடந்து போகும் மனித வாழ்வு ஒரு கிறுக்கல்
எழுதுக்கோலின் மதிப்பு ஒரு ரூபாயோ (அல்லது) கோடி ரூபாயோ அதன் பயணம் தொடர்வது ஒரு கிறுக்கலில் தான்
கிறுக்கும் வரை கிறுக்கிடு
வாழும் வரை மகிழ்ந்திரு
போட்டி உலகம் விழித்திரு
முடியும் வரை உதவிடு
முயற்சியோடு போராடு
திறமை உன்னோடு
தீயிருக்கனும் மனதோடு
வா வா தோழா உனக்கென வாசல் திறந்திடும் நாளும் தூரமில்லை
எதற்கும் அஞ்சாதே
எவரிடமும் கெஞ்சாதே
விழிகள் கலங்காதே
கவலையால் உடையாதே
காலம் வரும் காத்திடு தோழா
அலையாக எழுந்திடு தோழா
வா வா வரும் காலம் நம் கையில்

எழுதியவர் : பிரசன்னா கு (8-Sep-16, 12:11 pm)
பார்வை : 89

மேலே