காற்றில் கலந்த தமிழ் முத்து

14.08.2016 - இந்த நாள் தமிழர்களுக்கும், தமிழ் திரையுலகிற்கும் மறக்க இயலாத ஓர் கருப்பு தினம் என்றே கூறலாம்

உம்மை போன்று தமிழினை மூச்சாகவும், பேச்சாகவும், உயிராகவும் கருதிய அனைவரையும் இந்த தமிழ் இனம் என்றும் மறவாது என்று நம்புகிறேன்..

தமிழின் ஒரு முத்து காற்றில் மறைந்து விட்டதே
பல கண்கள் ,நெஞ்சங்கள் உன்னால் கலங்கி நின்றதே
நீ மறைந்த நொடியில் நேரம் நீளாது உறைந்து போனதே
உந்தன் வரிகளில் வாழ்ந்திட்ட மனங்கள் உடைந்து போனதே

நான்கு வயதில் அன்னையை இழந்தாய்.....
தந்தையே உனது தாயும் என உணர்ந்தாய்....
பெற்ற அன்னை போனால் என்ன தமிழ் அன்னையின் கைப்பிடித்து வளர்ந்தாய்......
உறவினர்களுடன் உந்தன் நெருக்கத்தை விட புத்தகங்களையே நீ செந்தம்,பந்தமாக நினைத்தாய்.....

உனது பாடலிலே ஒரு முறை அல்ல பல முறை உமது தந்தையை பற்றி கூறினாய்......
விளியினையும்,அகத்தினையும் பாசத்தினால் கலங்க வைத்தாய்
மனதை உறங்க வைத்தாய்.......

சோகம், கண்ணீர்,வறுமை என எல்லாவற்றையும் உந்தன் பேனா மையினில் விரட்டி அடித்தாய்.....
நீ விழா மேடையில் பேசியதை விட உன் எழுத்துக்களால் அதிகம் பேசினாய்.....
மனமுடைந்த பலரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை வரியினில் ஆறுதல் தந்தாய்.....

மிக எதார்த்த தமிழ் வரியினை மிக்க அற்புதமாக மெட்டுகளில் புகுத்தினாய்....
அப்பா,மகள் பாசத்தை உனது மதி மயக்கும் வரியினில் தீட்டினாய்......
பாடலில் தெய்வத்தையும் தோற்றுவிட வைத்தாய்....

வெயிலை அழகென மாற்றினாய்
மழையை எழில் செய்தாய்.....
காதலை மிக சாதுர்யமாக மிக வனப்பாக,காமம், இழிவின்றி படைத்தாய்....

உதவி என்ற குரலை நீ கேட்டால் உடனே உதவிடும் எழுத்துலகின் கர்ணன் நீ....
எவரையும் சார்ந்திராது உழைப்பால் உயர்ந்தவர் நீ.....

உந்தன் பாதையில் வளர்ச்சி வந்த போதும் தற்புகழ்ச்சி உன்வசம் இருந்ததுமில்லை....
உயரம் பல நீ சென்ற போதும் வந்த வழியினை நீயும் மறந்ததுமில்லை......
எளிமையாகவே வாழ்ந்தாய் என்றும் உன்னிடம் மாற்றமில்லை......

ஏன் அண்ணா இப்படி ஒரு ஏமாற்றம் தந்தாய்....
உங்கள் எழுத்தினால் என்னிடத்தே பற்பல மாற்றம் செய்தாய்......
பல தமிழர்களின் மனதை நீயும் வென்றாய்....
சொல்லாமல் ஏனோ விடை பெற்று சென்றாய்....

உம்மை கண்டு பாடல் எழுத கற்றேன்
உன் வசம் இருந்து பல நுனுக்கம் பெற்றேன்
உனது வரிகளை செவி சுவைத்து, மனம் ரசித்து வளர்ந்தேன்
உந்தன் முத்தான வரிகள் இன்றி பாடல்களா?
என்று என்றும் உம் கவிதை காகிதத்திலும்,வரிகள் காற்றிலும் இருந்துக் கொண்டே இருக்கும்..

- pras2lyric

எழுதியவர் : பிரசன்னா (8-Sep-16, 12:36 pm)
பார்வை : 183

மேலே