போலி சுதந்திரம்
இதுவா ....உண்மை சுதந்திரம்
வெள்ளைக்காரன் வசம் இருந்து சுதந்திரம் பெற்று தந்தார் காந்தியார்...
ஆதலால் என்ன பயன் இந்த நாட்டில் வறுமையில்லையா?
ஏழைகளில்லையா?
பசித்த வயிறுகள் நிறைகிறதா?
குடிசைகள் கோபுரமாயிற்றா?
வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம் நம் நாட்டு கொள்ளையர்களிடம் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதா?
மக்களின் வரிப்பணங்கள் களவுப்போனது
குடிமக்களின் உரிமைகள் பறிப்போனது
பசி நோயால் ஏழைகள் உயிர்போனது
நீரின்றி விவசாய நிலங்கள் கருகிப்போனது
போராட்டங்கள் மட்டுமே பழகிப்போனது
பள்ளத்தாக்கு நோக்கி பாய்ந்து நிரம்பும் நீர் போலே
செல்வந்தர்களையும், கொள்ளைக்காரர்ளிடமும் தான் பணம் சேர்கிறது..
என்று ஏழைகளின் பசி,வறுமை, தேவை,கல்வி,சுகாதாரம் பூர்த்தி அடைகிறதோ அன்றே உண்மை சுதந்திரம் .