மாதவிடாய் சரிவர வராததற்கு காரணங்கள் இவைதான்

மாதவிடாய் 28- 30 நாட்களுக்குள் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதென பொருள். மாதவிடாய் வரும்போது உங்களுக்கு உடல் அசதி, கால் வலி, தசை வலி வருகிறதே என கவலைப்படாதீர்கள். ஏனென்றால் மாதவிடாய் சீராக வருவதால், இதய நோய், சில புற்று நோய்கள், சர்க்கரை வியாதி ஆகியவை தடுக்கப்படுகிறது என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. உங்கள் சீரற்ற மாதவிடாய்க்கு கீழே சொல்பவைகளும் காரணமாக இருக்கலாம்.

உடற்பயிற்சி :

அளவுக்கு அதிகமாக உடற்ப்யிற்சி டயட் என இருக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக காணப்படும். கொலஸ்ட்ரால் பாலின ஹார்மோன்கள் சுரக்க இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் குறைவால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காமல் போகும். இதனால் சீரற்ற மாடஹ்விடாய் தோன்றலாம்.

மருந்துகள் :

தைராய்டு பிரச்சனை, மன வியாதிக்கு என எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும் ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.

இடைவிடாத பயணம் :

அடிக்கடி வெளி நாடு பயணங்கள் செய்பவர்களுக்கு நேரம், காலம் மாறுபடுவதால், உடல் ரிதம் பாதிக்கப்படும். இதனால் மாதவிடாய் சீரில்லாமல் போகலாம்.

உடல் பருமன் :

கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது , ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் தரக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை உண்டாகும் . அதிலொன்று சீரற்ற மாத விடாய். மன அழுத்தம் இனப்பருக்க மண்டலத்தை பாதிக்கும்.

முறையற்ற தூக்கம் :

போதிய தூக்கம் இல்லாமல் போனாலோ, அல்லது ஒழுங்கு முறையில்லாம, அகால நேரத்தில் விழித்து, தாமதமாக தூங்கச் செய்வது ஹார்மோனை பாதிக்கும். குறிப்பாக நைட் ஷிஃப்ட் முறையில் இரவில் வேலை செய்து, பகலில் தூங்குபவர்களுக்கு சீரற்ற மாதவிடாய்வருவது நடக்கிறது.

பூச்சிக் கொல்லிமருந்து :

செடிகளுக்கு போடும் பூச்சிக் கொல்லி மருந்து, உரங்களால் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பை பாதிக்கச் செய்யும். அவற்றின் பெண்கள் உபயோகிக்கும்போது மாதவிடாய் பிரச்சனைகள் வரலாம்.

வயது :

வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரில்லாமல் மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஆகவே பயப்படத் தேவையில்லை.

மனப் பதட்டம் :

மனப்பதட்டம் என்பது மன வியாதிகளில் ஒன்று. இதனால் சரியாக சாப்பிட முடியாது. உடல் எடை கணிசமாக குறைந்துவிடும். இதுவே ஹார்மோன் சம நிலையற்ற தன்மைக்கு காரணமாகி, ஒழுங்கற்ற மாதவிடாயை ஏற்படுத்தும்



நன்றி: போல்ட் ஸ்கை - தமிழ் - உடல்நலம்
By: Hemalatha V Published: Thursday, September 8, 2016

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (8-Sep-16, 7:13 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 182

மேலே