ஏன் காவல்துறையைப் பார்த்து நாம் பயப்பட வேண்டும்

காக்கி என்னும் உடை
கருணையையும் , காவலையும்
நமக்கு உணர்த்த வேண்டும் !!


மாறாக சில மதியிழந்த மனிதர்கள்
பொய்வழக்கு என்ற ஆயுதத்தை
பகிரங்கமாக பயன்படுத்தியதால்
காவல்துறை என்றால் கண்டதும்
ஒதுங்கி கொள்கிறோம் சிலர்.

மருத்துவரின் மருந்து கூட
கசப்பு என தெரிந்தும் உடலுக்கு
நன்மை தருவதால் -நாம் அதை
ஏற்றுக் கொள்கிறோமே -ஆனால்
நம்மில் ஒருவர் சாலையோரம்
அடிபட்டு ஆபத்தில் துடிக்கும்போதும்
ஐயோ பாவம் என்று சுற்றி நின்று
வேடிக்கைப் பார்க்கிறோமே - அது
மனிதாபிமானம் இல்லாமல் இல்லை
காவல் துறையின் கேள்விகளுக்கு
பயந்து வேறு வழியின்றி நிற்கிறோம்

காந்தி நோட்டாய் சிலர் இருக்கும்போது
கள்ளநோட்டாய் சிலரும்
காவல்துறையில் கடமையாற்றுகின்றனரே
அதனால்தான் நாம் பயப்பட வேண்டி உள்ளது .

கன்னியின் கற்புக்கு சிலநேரம்
கண்ணி வைக்கும் வேடர்களும்
கையூட்டால் தன் கல்லாவை
நிரப்பும் வேட்டை நரிகள் போன்ற
சிலரும் நம் முன் தெரிவதால்
காவல்துறை என்பது கசப்பான
இடமாகிறது நமக்கு !


கல்வியறிவில்லா மக்களுக்கு
கடவுளாக தெரியவேண்டிய
காவல்துறை அவர்களை
கரப்பான்பூச்சிகளாய்
எண்ணி நசுக்கும்போது
காவல்துறை நாம் கண்ணில்
காணும் நரகமாகிறது

வீரமானக் காவல்துறை
சில அமைச்சர்களின் பிடியில்
விலைமலிவான காவலர்களாகும்போது
வேண்டாத இடமாகிறது அவ்விடம்

மருந்து மனநோயைப் போக்கக்
கூடியதாக இருக்க வேண்டும் -ஆனால்
இவர்கள் கொடுக்கும் தண்டனை
என்னும் மருந்து மரணத்தை தந்து
மனித வாழ்வைப் போக்கக் கூடியதாகவே
பெரும்பாலும் அமைவதால் தான்
இவ்விடம் பயமான
இடமாகிறது நமக்கு !

அவ்வையின் புறநானூறு கூற்று போல்
நம்மைப் பொறுத்தே நாம் இருக்கும்
இடமும் சிறப்பு பெறும்!!!-அதுபோல்

காவல்துறை கடவுளாக இருந்தால்
நாம் அவ்விடத்தை கோவிலாக
நினைப்போம் !!!
காவல்துறை நம் சுதந்திரத்தை
பறிக்கும் பயங்கரவாதியாக
இருந்தால் அதுவே நாம்
கால் வைக்க மறுக்கும்
பாவபூமியாகும் !!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (7-Sep-16, 7:12 pm)
பார்வை : 163

மேலே