வா வா தோழிகளே

வா வா வா தோழிகளே விளையாடலாம்
வீரம் கொண்ட பெண்ணாக நாம் வளரலாம்
விருதுகளும் பதக்கங்களும் வாங்கி வரலாம்
எதற்கும் நாம் இளைப்பில்லை என்று கூறலாம்
நிகரல்ல அதையும் தாண்டி என்று சொல்லலாம்
ஏற்றம் பெற முயற்சிப்போருக்கு கை கொடுக்கலாம்
ஏற்றுக் கொண்ட மக்களையே நாம் பாராட்டலாம்
வீட்டுக் குள்ளே இருந்ததெல்லாம் மறந்தே விடலாம்
உலகம் முழுதும் சுற்றிவந்து ஓடி ஆடலாம்
இறக்கை வைத்த பறவையாக வானம் ஆளலாம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Sep-16, 7:32 am)
Tanglish : vaa vaa tholigale
பார்வை : 206

மேலே