பெற்றது சுதந்திரம் என்றால்

பெற்றது சுதந்திரம் என்றால்

பெற்றது சுதந்திரம் என்றால்
பெற்ற தாயையே காசுக்காக கொள்வதேனோ?
கற்றது செந்தமிழ் என்றால்
சிறைக்கைதியாய் தமிழ் போனதேனோ?
நாவில் ஆங்கிலம் இல்லை என்றால்
சமூகம் மதிக்காதது ஏனோ?

நாட்டை காக்க வீரத்தை காட்டியவர் வீரர் என்றால் ?
வன்புணர்வில் வீரத்தை காட்டுபவர்களை தண்டிக்காதது ஏனோ?
பெற்றது சுதந்திரம் என்றால்
நடுப்பகலில் கற்புகள் சூறையாடப்படுவது ஏனோ?
சுதந்திரம் பெற்றது நம் நாடு என்றால்
அரசியல் அதிகாரம் அற்றதேனோ?

எழுதியவர் : மாஹிரா (8-Sep-16, 6:19 pm)
பார்வை : 66

மேலே