திருவரங்க தேவதை - 1

காதல் கதை ...

🌺திருவரங்க தேவதை 🌺

அன்று காலை உறக்கத்தின் உரசலில் கார்த்திக்கின் முகம் சற்று காதல் கனவில் மூழ்கிருந்தது .அவளின் மாயாஜாலப்பார்வை அவனின் இமைக்கு அடியில் சொர்க்கலோகத்தை படைத்து தந்தது.அந்த பெண்ணின் பெயர் தெரியாது, ஆனாலும் அவளின் சிறுதுளிப்பார்வை கார்த்திக்கை கண்திறக்க விடாமல் காதல் மொழி கற்றுக்கொடுத்து கொண்டிருந்தது.அதற்கு காரணம் நேற்று மாலை சந்திப்பு, கார்த்திக்கும் அவன் நண்பன் மதனும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் .
மழையின் வரவை தெரிவிக்க தென்றலும் சில்லிற்று சென்றது.கார்த்திக்கின் உள்ளுணர்வு மகிழ்ச்சியின் வரவிற்கான புரிதலில் அவனுக்கு புதுவிதமான வானிலையை பரிசளித்தது.ஆகவே, அந்த தருணம் அவனுடையது என்பதில் ஐயமில்லை.இருவரும் ஏதோ பேசிக்கொண்டு செல்ல, சற்றுத்தொலைவில் இரு தோழிகள் மிதிவண்டியை தள்ளிக்கொண்டு நேர் எதிரே வருகிறார்கள். கார்த்திக்கின் கண்கள் எதேச்சையாக வருடியது அவளின் விழிகளை, அவளும் சிறு குழந்தையை கொஞ்சும் சாயலில் அவன் பார்வைக்கு அடைக்கலம் தருகிறாள். ஒரு நொடியினும் குறைவுதான் இந்த தருணம் பறந்தான், மறந்தான் ,தானாவாகவே பேசுகிறான்
"யாருடா அவள் ".மதனுக்கு புரியவில்லை போல,அவன் நிலைமை பாவம் தான், அவனுக்கு தெரியாதல்லவா காதல் பிறந்த விடலையின் மழலை வரிகள். இதுதான், கார்த்திக்கின் காதல் பூத்த முதல் காலை தொடக்கம்,சற்று பட்டாம்பூச்சிகள் அவன் இதயத்தில் பாடட்டும். அவளின் காட்சி மிதவையில் அவன் காற்றாய் கலக்கும் சமயத்தில் எழுப்பமனமில்லாமல் நகர்ந்து செல்வோம், இனிவரும் அவன் காதல் வரிகள் நாளை வரை என்னென்ன சுக வலி தருமோ?

தொடரும் ..
*மருதுபாண்டியன். க

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (11-Sep-16, 10:32 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 264

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே