என் அழகே என் உயிரே

ஆண்: அழகே என் அழகே
எந்தன் அருகில் நீயடி
இன்றே தொலைந்தேன்
உன்னிடம் நானடி …….

பெண்: உயிரே என் உயிரே
எந்தன் அருகில் நீயடா
இன்றே இழந்தேன்
உன்னிடம் நானடா ……….

ஆண்: என் தோளில் நீ சாய்ந்து சாய்ந்து – என்
காதோரம் கதை பேச – மொத்தமாய்
என்னை மறந்து – விண்ணுக்குள்
பறக்கிறேனடி உன்னால் அன்பே ….

பெண்: நீ தொட்டு தொட்டு பேச – உன்
விழிகள் மின்னல் போன்று காதல் வீச
யாரும் இல்லா பூமியில் – நான்
என்னை மறந்து உந்தன் சட்டைகுக்குள் மறைய
என் சொர்கத்தைக் கண்டேனடா …….

ஆண் : எந்தன் அருகில் நீ இருப்பதால்
இதுவரை நான் வாழ்ந்தப் பூமி
எனக்குள் புதிதானதடி – இந்த
தருணம் என் ஆயுள் முடியும் வரை நீள
ஆயிரம் தடைகளையும் தாண்டி வந்து
உன்னை அடைவேன் என் அன்பே ……..

பெண் : இத்தனை நாளாய் தேடி தேடி – நான்
கண்ட சொர்க்கப் பூமி நீயடா ….
உன்னோடு வாழத் தானே – இந்த
மண்ணில் பிறந்தேனடா …..

ஆண் : உன் அன்பெனும் சிறையில்
மாட்டிக்கொண்டேன் – உன்
இரு விழிகளில் என்னை வைத்து பூட்டிவிட்டாய் – இனி
நீ தான் என் உலகமடி – நான்
வாழ்ந்தாலும் உன்னோடுதான்
மறைந்தாலும் உன் காதலனாக
மட்டுமே மறைவேன் அன்பே ….

பெண் : நீ என்னை பிரிந்தாலும்
நான் உன்னைப் பிரிந்தாலும்
என் இதயம் நின்று விடுமடா என் உயிரே …

ஆண் : அழகே என் அழகே ..........
பெண்: உயிரே என் உயிரே .........

எழுதியவர் : M . சரண்யா (13-Sep-16, 2:18 pm)
Tanglish : en azhage en uyire
பார்வை : 267

மேலே