அவிழா முடிச்சி

அவனுக்கு மரணத்தை எழுதத் தெரியாது
ஒருநாள் விட்டு ஒருநாள் போனாலும்
அவனால் கா-விரி இல்லாமல்
இருக்க முடியாது.

என்ன நினைத்து
அவர்கள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
அந்த புதை குழியை
அவன் மரணித்து
அநேக நாட்களாகியும் என்ன நினைத்து
அவர்கள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
அவனுக்கான அந்த புதை குழியை .

மலர் வனங்கள் சுருங்கிய
முட்காட்டிடை
முட்டியில் நடந்து விரதம் முடித்தான்
காப்பாற்ற கணேசன் வருவானென்று.
கடலிலும் காயலிலும்
கணேசனை கரைத்தது தெரியாத அவனுக்கு
மரணத்தை எழுதத் தெரியாது.
ஒருநாள் விட்டு ஒருநாள் போனாலும்
அவனால் கா-விரி இல்லாமல்
இருக்க முடியாது.

கடைசியில்
காவிரியை
கைது செய்தவர்கள்
மரணத்தை விடுதலை செய்தார்கள்
கருப்பு மையில் கைச்சாத்திட்டும்
காலணா தண்டப்பணம் செலுத்தியும்.

அந்த கலவரத்தில்
அற்ப ஆயுளில் மாண்டவன் ஆன்மா
அழுது கோஷம் போட்டது:
விமானத்தையும் புகை வண்டியையும்
தேசீயமயமாக்கிய
வெள்ளைக்காரன் வாழ்க என்று.

சுசீந்திரன்.

எழுதியவர் : சுசீந்திரன். (2016) (22-Sep-16, 2:08 pm)
பார்வை : 51

மேலே