என்னுள் மேயும் கண்கள் -சுஜய் ரகு

ஒரு செம்மறியை அதன் நேர்பார்வையில்
சந்திக்கிறேன் குழந்தைமை பேசுமதன்
கண்களின் மெல்லிய அழுத்தமும் கனிவும்
என்னவோ செய்கிறது என்னை
நன் கணம் கிளைத்த அப்பார்வையின்
ஈர டவல்கொண்டு மனம் ஒற்றுகிற தருணம்
அது மேயத் தலை தாழ்த்துகிறது
மீண்டும் அக்கண்களைச் சந்திக்க
முன்னெடுத்த பரீட்சையில்
நான் தோற்றுக் கொண்டிருக்க
எங்கிருந்தோ வந்த ஆட்டிடையன் அதை
ஓட்டிக்கொண்டு போய்விடுகிறான்
என்னுள் மேய்ந்து தணிகிறது ஆடு

எழுதியவர் : சுஜய் ரகு (24-Sep-16, 9:06 am)
பார்வை : 104

மேலே