நில்லடி நான் பார்க்கட்டும்
நல்விருந்து நல்கிடும் காதல் இருநயனம்
சொல்விருந்து நல்கும் இதழ்தமிழ் மெல்லினம்
மெல்ல நடக்கும் தளிர்மேனி பூந்தோட்டம்
நில்லடி நான்பார்க்கட் டும் .
----கவின் சாரலன்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

