இயற்கையழகு பெண்ணே
முழு சந்திர முகம்
இரு பிறை விழி
மலை அருவி கூந்தல்
மலர் இதழ் உதடு
சந்தனம் அவள் மனம்
பூவது இவள் குணம்
இலையா இவள் இடை
மயிலா என்வளின் நடை
மாதுளை அவள் பற்கள்
புல்லாங்குழல் இவள் மூக்கு
குயில் கூவும் பேட்சு
தென்றலோ இவளிடும் மூட்சு
குட்டிப்பழம் கொண்ட பொட்டு
அத்தியாய் உன்னிரு தட்டு(செவி)
முல்லை அவள் வாழிடம்
நெய்தல் இவள் புகழிடம்
இரவு பகல் உருவம்
இருண்ட வானப் புருவம்
இசை இயங்கும் நேரமிது
பெண்ணே நீயும் இயற்கையோ?