பேருந்து பயணம்
பாட்டுச் சத்தம் அலறும் பேருந்தில் உறக்கத்தின் இடையே சிரிக்கும் குழந்தையின் மழலை அழகு
திடீரென பிரேக் போடப்பட்டதும் எதுவும் செய்யாது ,
தனது குழந்தையை மட்டும் அணைத்துக் கொள்ளும் தாயின் அன்பு அழகு
கம்பனை மிஞ்சும் வகையில்
பெண்களை வர்ணித்து பாடும் கல்லூரி இளைஞர்களின்
கவித்துவம் அழகு
வர்ணனையைக் கேட்டு
புன்னகைக்க முடியாமல் அடக்கும் இளம் பெண்ணின் பண்பு அழகு
தோள் பையை வைத்துக் கொள்ளவா? என நின்று கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்து கேட்கும் இளம் பெண்ணின் கருணை அழகு
எப்படியாவது இந்தப் பெண்ணின் கைப்பேசி எண்ணை வாங்கிட வேண்டும் என்ற இளைஞனின் இலட்சியம் மிக அழகு
அமர்ந்திருக்கும் ஓர் ஆண் மகனைக் கண்டு, இடம் கிடைக்குமா? என ஏக்கப் பார்வை வீச முடிவெடுக்கும் பெண்மை அழகோ அழகு
அவள் ஆரம்பிக்கும் முன்னே,
அடக்கத்துடன் எழுந்து இடம் கொடுக்கும் ஆணின் பெருந்தன்மை பேரழகு