செல்" வழி ஏனோ செல்ல விழைகிறாய்!
அன்பின் உறவுகள்
அனைத்து மகிழ
ஆவலாய் துடிக்குதே!
செல்லம் மறந்தே
" செல்" வழி ஏனோ
செல்ல விழைகிறாய்!
உன்மத்தம் உயிர்க்க
உயிர்ப்பை துறந்தே
உண்ண மறந்து
உறவை மறந்து
ஊனை மறந்து
உன்னை இழக்கிறாய்!
விட்டிலாய் வாழ்வை
வீனே இழக்க
விநோத விளக்குகள்
விந்தையில் மயங்கி
விடியல் காணாது
விழுந்து மரிக்கிறாய்!
செல்லிடம் சேர்ந்தால்
சொல் அதை
செல்" வழி!
இனிய உறவுக்கு
இப்போது அதை
இழத்தல் நலமே்!
மழலைப் பூக்கள்
மலர்ந்து சிரிக்க
மணந்தவர் சொற்கள்
மனதைப் பறிக்க
மகிழ்ச்சியால் மனங்கள்
களித்துப் பறக்கும்!
இல்லற உறவுகள்
இனிதாய் அமைய
அன்பின் உறவுகள்
உன்னைச் சூழ
உயிர்த்திரு மனமே
உயிர்த்திரு!
உயிராய் அவருடன்
இணைந்திரு.!